தமிழகம்

அமைச்சரின் பதிலுரை திமுக புறக்கணிப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் மாசிலாமணி பேசிக் கொண்டிருந்தார். அப் போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குறுக் கிட்டு, குட்கா விவகாரம் குறித்து பேச முயன்றார்.

அவருக்கு பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அனுமதி அளிக்க வில்லை.

இதையடுத்து துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள், மீண்டும் பேரவைக்கு திரும்பாமல், சுகாதாரத் துறை அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்தனர்.

SCROLL FOR NEXT