காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழைய இரும்பு பொருட்கள் கடைகளில் சோதனை மேற்கொண்டுள்ள போலீஸார், உரிய அனுமதியின்றி கடைகள் நடத்தப்படுவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட வியாபாரி களை கைது செய்துள்ளனர். மேலும், போலீஸாரின் சோதனை நடவடிக்கை தொடர்ந்துவரு கிறது. போலீஸாரின் இந்த நட வடிக்கைகளை நிறுத்தக் கோரி, பழைய இரும்பு வியாபாரிகள் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் பழைய இரும்பு வியாபாரிகள் மாவட்ட எஸ்.பி-யிடம் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கூறியதாவது:
மாவட்டம் முழுவதும் உள்ள பழைய இரும்பு கடைகளில் சோதனை மேற்கொண்டுள்ள போலீஸார், அனுமதியின்றி கடைகள் நடத்தப்படுவதாக கூறி 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். மேலும், கடைகளில் இருந்துசட்ட விரோத மான பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படாமல் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். சில இடங்களில், கடைகளில் சோதனை மேற்கொள்ளாம லேயே வியாபாரிகளை மிரட்டி கைது செய்துள்ளனர்.
போலீஸார் அனுமதித்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் உள்ள இரும்பு வியாபாரிகளை அழைத்து, போலீஸாரின் சட்ட விதிகள் குறித்து தெளிவுபடுத்தி தவறு செய்யும் நபர்கள் இருந்தால், அவர்களை அடையாளம் காட்டியிருப்போம். எனவே, பழைய இரும்பு பொருட்கள் வியாபாரிகள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி விஜயகுமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர், வியாபாரிகள் கைது நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார்’ இவ்வாறு அவர் கூறினார்.