தமிழகம்

சசிகலா தலைமையை நாம் அனைவரும் ஏற்போம்: பழனியப்பன், ஜக்கையன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சசிகலா தலைமையை நாம் ஏற்க வேண்டும் என டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பழனி யப்பன், ஜக்கையன் ஆகியோர் சட்டப்பேரவையில் பேசும்போது வேண்டுகோள் வைத்தனர்.

சட்டப்பேரவையில் துறைகள் மானிய கோரிக்கையில் அதிமுக சார்பில் 2 அல்லது 3 பேர் பேச அழைக்கப்படுவர். அதன்படி, நேற்று தொழிலாளர் நலன், பிற் படுத்தப்பட்டோர் நலத்துறைகள் மானியத்தில் தினகரன் ஆதரவா ளர்களான பழனியப்பன் மற்றும் ஜக்கையன் ஆகியோர் பேசினர். இருவரும் சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் ஆகியோருடன், முதல்வர் பழனிசாமியையும் வாழ்த்தினர்.

பழனியப்பன் பேசி முடிக்கும் போது, ‘‘நாம் அனைவரும் சசிகலா தலைமையை ஏற்போம்” என பேசி முடித்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி தரப்பினர் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

SCROLL FOR NEXT