தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்க அதன் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரி வித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, ‘‘கூகுள் நிறுவன சிஇஓவான தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னை வந்திருந்தார். அவரை அரசு தரப்பில் ஏன் வரவேற்கவில்லை’’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி யமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘அவர் சொந்த நாட்டுக்கு வந்துள் ளார். தமிழகத்துக்கான ஏதே னும் திட்டத்தை அறிவிக்க வந்திருந்தால் வரவேற்றிருப் போம்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச் சர் மணிகண்டன் பேசும்போது, ‘‘மதுரை அல்லது தென்தமி ழகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் கூகுள் மையம் அமைக்க சுந்தர் பிச்சையிடம் பேசியுள்ளேன். தொடர்ந்து விரைவில் அமெரிக்கா அல்லது சிங்கப்பூரில் அவரை சந்தித்துப் பேச உள்ளேன்’’ என்றார்.