தமிழகம்

அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மதியம் 1.45 மணி அளவில் இந்த சந்திப்பு நடந்தது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலை வர் கருணாஸ் ஆகியோர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு ஆதர வாக செயல்பட்டுவரும் இவர்கள், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருப்பது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் தமிமுன் அன்சாரி கூறியதாவது:

சிறையில் 14 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு பேரவைத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளேன்.

அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சியினரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கிறோம். கவன ஈர்ப்பு தீர்மானத் துக்கு ஆதரவு கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபூபக்கர் உள்ளிட்ட தலைவர்களை கருணாஸ், தனியரசு ஆகியோருடன் நானும் சந்தித்தேன். எங்களின் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறி வாளனை பரோலில் விடுதலை செய்யக்கோரி குரல் கொடுக்க வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது நாங்கள் வலி யுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் நேற்று ஸ்டாலினை சந்தித்துப் பேசி னார்.

SCROLL FOR NEXT