தமிழகம்

கையடக்க செயற்கைக்கோள் தயாரித்த முகமது ரிஃபாத் ஷாரூக்குக்கு பேரவையில் பாராட்டு

செய்திப்பிரிவு

கையடக்க செயற்கைக் கோளை தயாரித்த கரூர் மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக்குக்கு சட்டப் பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ‘‘கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்துள்ள முகமது ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்துள்ள கையடக்க செயற்கைக்கோள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இதற்காக ஷாரூக்குக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், ‘‘சாதனை மாண வர் ஷாரூக் எங்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரையும், அவரோடு ஆராய்ச்சி செய்த சக மாணவர்களையும் சென்னைக்கு வரவழைத்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கினோம்’’ என்றார்.

பரிசுத் தொகை

அப்போது குறுக்கிட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், ‘‘சாதனை மாணவர் ஷாரூக்குக்கு முதல்வருடன் ஆலோ சித்து பரிசுத் தொகை வழங்கப்படும்’’ என்றார்.

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லினும் மாணவர் ஷாரூக்கை பாராட்டி பேசினார்.

SCROLL FOR NEXT