தமிழகம்

தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும் போது, குமரி அருகே நிலவிய காற்ற ழுத்த தாழ்வுநிலையானது, தென் கிழக்கு அரபிக்கடலை நோக்கி நகர்ந்து சென்று விட்ட நிலையில், தமிழகம் மற்றும் புதுச் சேரில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.

சென்னை பொறுத்தவரை

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையை பொறுத் தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல் சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருமயம், பாபநாசத்தில் தலா 3 செமீ, திருச்செந்தூரில் 2 செமீ, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி,கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகி யுள்ளது. இவ்வாறு வானிலை மைய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT