தமிழகம்

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி மனு: குடியரசுத் தலைவருடன் ஸ்டாலின் சந்திப்பு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யிடம் புகார் அளிக்க மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.

மாலை 6.30 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஸ்டாலின் சந்தித்து, சட்டப்பேரவை யில் 18-ம் தேதி நடந்த நிகழ்வுகளை விவரித்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலி யுறுத்தி மனு அளித்தார். சந்திப்பின் போது துரைமுருகன், எம்பி.,க்கள் திருச்சி சிவா, ஆலந்தூர் பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகி யோர் இருந்தனர்.

சந்திப்பு முடிந்த பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘எதிரணி இல்லாத மைதானத்தில் விளையாடி அதில் வெற்றி பெற்றி ருப்பதைப் போல், எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களே ஓட்டுப் போட்டு, வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளனர். நடந்து முடிந்த வாக்கெடுப்பை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசு தலைவரிடம் கோரியுள்ளோம். அவரும் நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித் துள்ளார்’’ என்றார்.

மேலும், செய்தியாளர்கள் கேள் விக்கு அவர் பதிலளித்ததாவது:

தமிழக சட்டப்பேரவையில் மறைமுக வாக்கெடுப்புக்கு விதி இல்லை என்கிறார்களே?

எந்த விதியிலும் நடத்தக்கூடாது என்று இல்லை. சபாநாயகர் விருப் பப்படி வாக்கெடுப்பு நடத்தலாம் என விதி உள்ளது.

ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், பன்னீர்செல்வத்தை ஏற்போம். மற்றவர்களை ஏற்கமாட்டோம் என கூறியுள்ளாரே?

இது அவர்கள் சொந்த பிரச்சினை. இதில் திமுக தலையிடாது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தீபக் கோரி யுள்ளாரே?

தற்போதுதான் உண்மை வெளி வருகிறது. தற்போது இதை தீபக் கூறுகிறார். பன்னீர்செல்வம் தன் பதவி பறிக்கப்பட்ட பின், விசாரணை நடத்தவேண்டும் என்றார். திமுகவை பொறுத்தவரை, ஜெயலலிதா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டது முதல் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங் களை கேட்டோம். அவர் மறைந்த பின்னர், மரணத்தில் மர்மம் உள் ளது விசாரிக்க வேண்டும் என கூறிவந்தோம். ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவோம். விரைவில் திமுக ஆட்சி மலரும்.

திமுக வரம்பு மீறி வன்முறை யில் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன. அது உங்கள் தூண்டுதலின் பேரில் நடந்ததா? அப்படியிருந்தால் நீங்கள் திமுக செயல்தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட அருகதை இல்லை என்றுதானே அர்த்தம்?

நீங்கள் எந்த தூண்டுதலின் பேரில் கேள்வி எழுப்பியுள்ளீர்கள் என்பது தெரியும். திமுக அத்துமீறலை விரும்பியது கிடையாது. ஏற் கெனவே ஜெயலலிதா, ஜானகி அணி என அதிமுக உடைந்த போது சட்டப்பேரவையில் நடந்தது தெரியும். தற்போது கூவத்தூரில் என்ன நடந்தது என்பதும் தெரியும். திமுகவை பொறுத்தவரை என்றும் இது போன்றவற்றுக்கு துணை நிற்பதில்லை. எந்த அதிமுக உறுப்பி னர்களும் தாக்கப்படவில்லை. திமுகவினர் மட்டும் தாக்கப்பட்டனர். வீடியோக்களை முறையாக தந்தால் ஆதாரம் கிடைக்கும்.இவ்வாறு ஸ்டாலின் பதிலளித்தார்.

சோனியாவுடன் சந்திப்பு

இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT