சென்னையில் உள்ள மண்டல பாஸ் போர்ட் அலுவலகம் சார்பில் பிப்ரவரி 4-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு இன்று நடக்கிறது.
சென்னையில் சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக் கம் சாலை) ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் இந்த மேளா நடைபெறும். இந்த பாஸ் போர்ட் மேளாவில் பங்கேற்க விண்ணப் பதாரர்கள் அனைவரும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக் கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட ஏ.ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களையும் அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டுவர வேண்டும். புதிய பாஸ் போர்ட்டுக்கான விண்ணப்பம், காவல் துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) பிரிவிலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். இந்த மேளாவில் தத்கால் (உடனடி பாஸ்போர்ட்) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இந்த மேளாவுக்கான சந்திப்பு முன்பதிவு 31-01.2017 (இன்று) மதியம் 2 மணிக்கு நடைபெறும். மேளா நாளன்று, குறித்த நேரத்துக்கான விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங் களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக் கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.