பொய் வழக்கு பதிந்து சிறை யில் அடைத்த உதவி ஆய் வாளரை கண்டித்து தனியார் நிறுவன உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் கே.ஜி ராஜசேகர். இவர் நேற்று மாலை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீஸார், அவரை மீட்டனர். பின்னர், காவல் ஆணையரிடம் ராஜசேகர் கூறியதாவது:
அம்பத்தூரில் கேஜிஆர் என்ற பெயரில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். நான் கொடுத்த விளம்பரத் தைப் பார்த்து விருகம்பாக்கம் உதவி ஆய்வாளர் முரளி என்னை தொடர்பு கொண்டார். ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். உரிய அனுமதியுடன்தான் நிறுவனம் நடத்தி வருகிறேன் என்று கூறி சான்றிதழை காண்பித்தேன். அதை அவர் வாங்கி கிழித்துப் போட்டார்.
அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்து ரூ.5 லட்சத்து 80 ஆயிரம், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து 21 நாள் சிறையில் அடைத்தார். என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். இது குறித்து தியாகராய நகர் உதவி ஆணையர், துணை ஆணையரிடம் புகார் அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட உதவி ஆய் வாளர் முரளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட் டுள்ளார்.