கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரிகளுக்கு எதிராக சிஎம்டிஏ நிர்வாகம் செயல்பட்டால், காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நலச் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எம்.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோயம்பேடு காய்கறி அங்காடி யில் 5-ம் எண் நுழைவு வாயில் அருகில், வியாபாரிகள், பொதுமக் களின் வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை ஏற்றுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் திட்ட அனுமதியின்றி சிஎம்டிஏ நிர்வாகம் 29 கடைகளை கட்டி விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
அந்த வழக்கில், நீதிபதி அளித்த உத்தரவின்படி, உயர்மட்டக் குழு, செவ்வாய்க்கிழமையன்று கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்தது. அப்போது, கோயம் பேடு அங்காடி நிர்வாகக் குழு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடை களை வியாபாரிகளுக்கு வழங்கா மல், வியாபாரிகள், தொழிலாளர் கள் மற்றும் மக்களுக்கு பயனளிக் கும் விதமாக சேவை கடை களாக மாற்றலாம் என்று உயர் மட்டக் குழுவிடம் தெரிவித்தனர்.
அங்கு கூடிய வியாபாரிகள், “பொதுநலனுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் கடைகளை கட்டியது தவறு. அந்த கடைகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது. ஒரு வேளை சேவைக் கடை களாக ஒதுக்கினால், பின்னர், அதை கடையாக மாற்றிவிட வாய்ப் புள்ளது. அதனால், அந்த வளாகத் தில் முறையாக வியாபாரம் செய் யும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஒருசிலர் சட்டத்துக்கு புறம்பாக அந்த கடைகளை அடைய முயற்சிக்கிறார்கள். அதற்கு சிஎம்டிஏ துணை நிற்கிறது” என்று உயர்மட்டக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சங்கத் தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, “சிஎம்டிஏ நிர்வாகம், வியாபாரி களின் வாழ்வாதாரத்தை கெடுக்க, அவர்களுக்கு எதிராக செயல் பட்டால், காய்கறி சந்தையில் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.