அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உதவித்தொகை கோரிய பெண்ணிடம், அடிக்கடி ஆபாசமாக பேசிய விஏஓ நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த வர் திருஞானம்(50) சிறுகடம்பூர் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த, கணவரால் கைவிடப்பட்ட 35 வய தான பெண் ஒருவர், உதவித் தொகை கோரி அவரை அணுகினார். அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட விஏஓ, அடிக்கடி தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசியதாக கூறப்படுகிறது. விஏஓ பேசுவதை செல்போனில் பதிவு செய்த அந்த பெண், அதை வாட்ஸ்-அப் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, உடையார்பாளை யம் கோட்டாட்சியர் டினாகுமாரி நேற்று முன்தினம் விஏஓ-வை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணை யில், பெண்ணிடம் ஆபாசமாக பேசியது உண்மை யென தெரியவந்ததையடுத்து, விஏஓ திருஞானத்தை பணியிடை நீக்கம் செய்து அவர் நேற்று உத்தரவிட்டார்.