தமிழகம்

சென்னை பல்கலை. எம்பிஏ மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை: "கேம்பஸ் இண்டர்வியூ" மூலம் கிடைத்தது

செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்த மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் வேலை கிடைத் துள்ளது.

சென்னை பல்கலைக்கழக நிர்வாகவியல் துறையில் எம்பிஏ படிப்பு நடத்தப்படுகிறது. இங்கு படித்து முடிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேருக்கு வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இண்டர் வியூ) மூலம் வேலை கிடைத்து விடுகிறது. பெரும் பாலும், அவர்கள் வங்கிச் சேவை, தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி, சேவை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

நிறுவனங்கள்

இந்த நிலையில், 2016-17-ம் ஆண்டு படிப்பை முடிக்கவுள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, டிசிஎஸ், ஐடிசி, ராம்கோ சிமெண்ட்ஸ் உள்பட 34 நிறு வனங்கள் நடத்தின. இந்த வளாக நேர்முகத்தேர்வு மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் 41 மாணவர்களுக்கு வேலை கிடைத்தது.

அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பழைய மாணவர்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக நிர்வாக வியல்துறையின் தலைவர் பேராசி ரியை ஆர்.தேன்மொழி முன்னிலை யில், திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் டி.கே.பிரேம்குமார் மாணவர் களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், எம்பிஏ மாணவர்கள், அவர் களின் பெற்றோர் மற்றும் நிர்வாக வியல்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT