தமிழகம்

தாம்பரம் நகராட்சியை விரைவில் மாநகராட்சியாக மாற்ற வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ கோரிக்கை

செய்திப்பிரிவு

தாம்பரத்தை விரைவில் மாநக ராட்சியாக மாற்ற வேண்டும் என அத்தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாம்பரத்தில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

முதலில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, பணி களை விரைவுபடுத்த வேண் டும். தாம்பரத்தை விரைவில் மாநகராட்சியாக மாற்ற வேண்டும்.

மழை, வெள்ளத்தின்போது ஐஏஎஸ் அதிகாரிகள் அமுதா, ராஜாராம் ஆகியோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். நீர்வழித் தடங்களில் ஆக்கிரமிப்பு கள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. தாம்பரம் பேருந்து நிலையத்துக்காக விமானப்படையிடம் இருந்து 10 ஏக்கர் நிலத்தை அரசு பெற்றுள்ளது. அந்த இடத்தை நகராட்சி நிர்வாகம் பெற்று பேருந்து நிலையத்தை மேம் படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச் சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘மழை வெள்ளத்தின்போது நானும், மின் துறை அமைச்சரும் இணைந்து பணிகளை துரிதப் படுத்தினோம். அதன்பின் ரூ.246 கோடி ஒதுக்கப்பட்டு பொதுப் பணித்துறை மூலம் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.2 கோடியில் மழை நீர் திட்டப்பணிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தாம்பரத்தில் பேருந்து நிலையத் துக்கான இடம் இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப் படவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT