தமிழகம்

தமிழக மக்கள் விரும்புவது நிலையான ஆட்சிதான்.. நிழல் ஆட்சி அல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

செய்திப்பிரிவு

நிலையான ஆட்சிதான் மக்க ளின் விருப்பமே தவிர, நிழல் ஆட்சி அல்ல என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யுள்ளதாவது: சட்டப் பேரவை யில் வாக்கெடுப்பு நடந்தது என்று சொல்வதைவிட, நடத்தப் பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதைய அமைச்சரவை சட்டப்பேரவை உறுப்பினர் களின் வாக்குகளால் வெற்றி பெற்றதா, அல்லது எதிர்க்கட்சி யினரை தாக்கியதால் வெற்றி பெற்றார்களா? கூவத்தூரில் கூட்டி (பூட்டி) வைக்கப்பட்ட தன் காரணம் என்ன?

எதிர்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பு கேட்டார்கள். ஆனால், பேரவைத் தலைவரோ எதிர்க்கட்சியை வெளியேற்றி விட்டு ரகசியமாக வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறார். சட்ட விதி களுக்குள் நடந்திருக்க வேண் டிய வாக்கெடுப்பு, சட்டை கிழிப்புகளுடன் நடந்திருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் நிலையான ஆட்சியாக, ஊழல் கறைபடியாத ஆட்சியாக நடைபெற வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கிறது. நிலையான ஆட்சி தான் மக்களின் விருப்பமே தவிர நிழல் ஆட்சி அல்ல. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT