தஞ்சை பெரியகோயிலில் நேற்று பெருவுடையாருக்கு அன்னா பிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி 1,000 கிலோ காய், கனிகளால் அலங்காரம் செய் யப்பட்டது.
ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தஞ்சை பெரியகோயில் பெருவுடை யாருக்கு நேற்று எண்ணெய், அரிசிப்பொடி, மஞ்சள், திரவியப்பொடி, பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 30 மூட்டை அரிசியைக் கொண்டு சமைக்கப்பட்ட சோற்றைக் கொண்டு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 1,000 கிலோ காய், கனிகளைக் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.
இதேபோல, பள்ளியக்ரா ஹாரத்தில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு அன்னா பிஷேகம் செய்யப்பட்டது.
கும்பகோணத்தில்...
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் உள்ள 16 லிங்கங்களான பிரம்மதீர்த்தர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமா பாகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம் மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ் தரபாலேஸ்வரருக்கும் அன்னா பிஷேகம் நடைபெற்றது. அபிமு கேஸ்வரர் ஆலய கிருத்திகை வழிபாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.