துணை நிலை ராணுவத்தில் சிப்பாய், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் 10-ம் தேதி கேரளாவில் உள்ள கண்ணூர் கோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த பணிகளில் சேர கல்வித் தகுதியாக சிப்பாய் பணிக்கு 10-ம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் சராசரியாக 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கிளார்க் பணிக்கு பிளஸ் டூவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சியும், சமையற்கலைஞர் பணிக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சியும், சம்பந்தப்பட்ட தொழிலில் போதிய முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 42க்குள் இருக்க வேண்டும். மேலும், உடல் தகுதியாக 160 செ.மீட்டர் உயரமும், 50 கிலோ எடையும் இருக்கவேண்டும். மார்பளவு 77 முதல் 82 செ.மீட்டர் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி, இருப்பிடம், நன்னடத்தை ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களையும், வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு, புதுவையில் வசிப்பவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.