நாளிதழ் அலுவலக எரிப்பு வழக் கில் மலேசியாவில் தலைமறை வாக இருந்துவரும் அட்டாக் பாண்டியின் கூட்டாளிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் நாளிதழ் அலுவ லகம் ஒன்றில் கடந்த 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறை யீட்டு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையை இழுத்தடித்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு பிடிவாரன்ட் பிறப் பிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோர் ஓர் ஆண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வரு கின்றனர். இவர்களில் தயாமுத்து மலேசியாவில் தலைமறைவாக உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ மனு மீதும் விசாரணை
மலேசியாவில் தலை மறைவாக இருந்துவரும் தயா முத்துவை கைது செய்ய காலக் கெடு விதிக்காமல் பிடிவாரன்ட் (ஓபன் வாரன்ட்) பிறப்பிக்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது.
பின்னர் மலேசியாவில் தலைமறைவாக இருந்துவரும் தயா முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, அவருக்கு எதிராக காலக்கெடு விதிக்காமல் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்க பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.