தமிழகம்

அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்கள் சென்னைக்கு வர முதல்வர் அழைப்பு

செய்திப்பிரிவு

அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

பரபரபான அரசியல் சூழலில் கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து எம்எல்ஏக்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்கள் சென்னை வந்தவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேவேளையில், லஞ்சம் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

          
SCROLL FOR NEXT