வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் கமல்ஹாசன் இன்று ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
தனியார் தொலைக்காட்சி ஒன் றில் கடந்த மார்ச் 12-ம் தேதி நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சி யில் பங்கேற்ற கமல்ஹாசன், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும், இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீ ஸாருக்கு உத்தரவிடக் கோரியும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பழவூ ரைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதித்துறை நடுவர், மே 5-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜ ராக கமல்ஹாசனுக்கு உத்தரவிட் டார். இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யவும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று முன்தினம் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், “தொலைக்காட்சி நேர்காணலில் நெறியாளரின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு என் மனதில்பட்டதை தெரிவித்தேன். யாருடைய மனதையும் புண்படுத் தும் நோக்கத்தில் கருத்துத் தெரி விக்கவில்லை. வள்ளியூர் நீதிமன் றம் அனுப்பிய சம்மனில் என் மீது என்ன குற்றச்சாட்டு கூறப்பட் டுள்ளது, என்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. எனவே, வள்ளியூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வள்ளியூர் நீதிமன்ற விசா ரணைக்கு தடை விதித்தும், விசார ணையின்போது ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆதி நாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன் சார்பில் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆஜரானார். அவர் வாதிடும்போது, “இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி கருத்து சுதந்திரம் உள்ளது. ஒருவர் தெரிவிக்கும் கருத்து பிடிக்காமல் போனால், அதற்கு மாற்றாக கருத்து தெரி விக்கலாமே தவிர குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்ள முடியாது. எம்.எப்.உசேன், பெருமாள் முருகன் வழக்கில் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கின் தன்மையை பார்க்காமல், வழக் கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு களுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராயாமல், முதல் விசா ரணையிலேயே நீதித்துறை நடுவர் சம்மன் அனுப்பியுள்ளார்” என்றார்.
இதையடுத்து, வள்ளியூர் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள கமல் ஹாசனுக்கு எதிரான வழக்கின் விசா ரணைக்கு இடைக்கால தடை விதித் தும், நீதிமன்றத்தில் இன்று கமல் ஹாசன் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.