தமிழகம்

குடியரசு தின விழா நடக்கும் மெரினாவில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

செய்திப்பிரிவு

குடியரசு தின விழா இன்று கோலா கலமாக நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதை முன்னிட்டு, சென்னை முழு வதும் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக சென்னை போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கை மேற்கொண் டனர்.

அதைத்தொடர்ந்து விழா நடைபெறும் மெரினா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னை பாதுகாப்பு பிரிவினர், வெடிகுண்டு கண்டு பிடிப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் சோதனை நடத்தினர். மேலும் சென்னை நகர் முழுவதும் சோதனை நடைபெற்றது.

SCROLL FOR NEXT