தமிழகம்

மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அதன் கீழ் இயங்கும் சிறுபான்மை மொழி மற்றும் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழி மற்றும் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமன கலந்தாய்வு நவம்பர் 13-ம் தேதி, காலை 11 மணிக்கு இணையதளம் மூலமாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வு தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழி வழிப்பாட ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆணை பெற்ற பணி நாடுநர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். அப்போது தெரிவுச்சான்று, தங்கள் கல்விச் சான்றுகளை உடன் கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT