தமிழகம்

பவுன் விலை ரூ.352 உயர்வு

செய்திப்பிரிவு

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.352 உயர்ந்தது.

சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,424 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ. 19,392 ஆகவும் இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.44 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் விலை ரூ.2,468 ஆகவும், பவுன் விலை ரூ.352 உயர்ந்து ரூ.19,744 ஆகவும் அதிகரித்தது.

நேற்று முன்தினம் ரூ.36.90 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 60 பைசா உயர்ந்து ரூ.37.50 ஆக அதிகரித்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.545 உயர்ந்து ரூ.35,000-க்கு விற்கப்பட்டது.

SCROLL FOR NEXT