கடந்த 2012, மே 11-ம் தேதி மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் போதை பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அந்த ரயிலில் 6 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ராமேஷ்வர், பத்ரிலால், அவரது மனைவி முன்னிபாய், மகள் ரேகா மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கே.ஐயப்பன்,
5 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பளித்தார்.