தமிழக அமைச்சர்களின் கருத்து வேறுபாட்டால், எய்ம்ஸ் மருத்துவ மனை வேறு மாநிலத்துக்கு சென்று விடக் கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருங்காலத்தில் பாஸ்போர்ட்டில் இந்தி மொழி மட்டுமே இடம் பெறும் என்று மத்திய அரசு கூறி யுள்ளது சரியல்ல. அரசியல மைப்பு சட்டத்தின் அட்டவணை 8-ல், 22 மொழிகள் அங்கீகரிக் கப்பட்டுள்ளன. எனவே, இந்தி மட் டுமே இருக்கும் என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யாதது கண்டிக்கத்தக்கது. ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆனால், தமிழக அமைச்சர்களின் கருத்து வேறுபாட்டால், தொழிற்சாலைகள் எப்படி வெளி மாநிலங்களுக்கு சென்றதோ, அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனையும் வெளி மாநிலத்துக்கு சென்றுவிடக் கூடாது. மத்திய அரசும், தமிழக அரசும் நடுநிலையுடன் செயல்பட்டு, உரிய இடத்தை தேர்வு செய்து, விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார்.