தமிழகம்

அத்வானி, கமல்ஹாசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடியின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று அவர் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் சென்றனர்.

முன்னதாக மோடி தனது டிவிட்டரில், "அத்வானிஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துக்கள். அத்வானிஜியின் இணையற்ற அறிவாற்றல் அவரை பொதுவாழ்வில் மிகச்சிறந்த மனிதராக்கியுள்ளது. நாம் அனைவரும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளன்று தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்ததற்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT