மே தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் வித்யாசாகர் ராவ்:
நவீனமயமாக்கல் காரணமாக இன்று வேலை செய்யும் முறை மாறியுள்ளது. தொழிலாளர்களும், தொழில் நிறுவனங்களும் சர்வ தேச தரத்துக்கு மாறி வருகின்றனர். இத்தருணத்தில் தொழிலாளர்களுக்கும் அவர் களது குடும்பத்தினருக்கும் பாது காப்பான, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும், பாதுகாப்பை யும் வழங்கி அவர்கள் மேலும் திறம்பட பணியாற்ற ஊக்கப்படுத்த வேண்டும். இத்திருநாளில் தொழி லாளர்கள் தங்கள் துறைகளில் வெற்றியுடன் செயல்பட எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் கே. பழனிசாமி:
உழைக்கும் மக்களின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகின்ற இந்த மே தினத் திருநாளில், ‘உழைப்பு என்னும் மரத்தின் வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை என்பதை உணர்ந்து, சோம்பலை நீக்கி, கடினமாக உழைத்தால் வாழ்வில் உயர்வு பெறலாம்’ என்ற வாக்கை மனதில் நிறுத்தி அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் நாடும் வீடும் வளம் பெறும். தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:
புதிய தொழிலாளர் சட்டம், உலகமயமாக்கல் என்று எந்த காலகட்டத்திலும் தொழிலா ளர்களுக்கு பிரச்சினைகள் எழும் போது முதல் படைத் தளபதியாக நின்று தொழிலாளர்களின் உரிமை களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் போராடும் என்பதை இந்த மே தினத்தன்று தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர் களுக்கு எனது சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:
மறைந்த முதல்வர் கள் எம்ஜிஆரும், ஜெயலலிதா வும் அனைத்து தரப்பு உழைப்பாளி களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கான திட்டங்களை நடை முறைப்படுத்தினார்கள். தொழிலா ளர் வர்க்கத்தைச் சார்ந்த மக்கள், தங்களது வாழ்வில் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ வேண்டும் என்று மே தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்:
இந்திய நாட்டின் முன்னேற்றத் துக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. அத்தகைய உழைப்பை வழங்கி தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தொழிலா ளர் வர்க்கத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
சமீப காலமாக தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளையும், பாது காப்பையும் இழந்து வருகிறார் கள். இது தொழிலாளர் வர்க்கத் துக்கு இழப்பு அல்ல. நம் நாட்டுக்கும், செய்யும் தொழிலுக் கும்தான் இழப்பு. உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என மே தின வாழ்த்து களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
இவ்வாண்டு மேதின விழாவில் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராக, மதவாத, சாதியவாத சக்திகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் திரண்டு அணி வகுக்க வும், பரந்துபட்ட ஜனநாயக மதச் சார்பற்ற அணி அமைக்கவும் போராடவும் முன்வர வேண்டு கிறோம். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என உழைக்கும் மக்களின் ஒற்றுமைதான் இன்றைய சவால் களை சந்திக்க மிகப் பொருத்தமான ஆயுதமாக அமையும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
தமிழக மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே போராட்ட உணர்வு அதிகரித்து வருகிறது. மே தின பாரம்பரியம் உருவாக்கிய இந்த போராட்ட உணர்வை வலுவாக முன்னெடுத்துச் செல்வோம். நாடு தழுவிய அளவிலும், தமிழகத்திலும் மாற்றுக் கொள்கையை முன்வைத்து மகத்தான மக்கள் போராட்டங்களை நடத்திட இந்த மே தினத்தில் உறுதியேற்போம்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:
வறட்சி, விலைவாசி உயர்வு ஆகியவை மக்களின் வாழ்க்கையை முடக்கியதுடன், வாழ்வாதாரத்தையும் பறித்து விட்டன. தீய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்ததன் பயனை தமிழகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் மேதின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.