தமிழகம்

சேகர் ரெட்டியின் கூட்டாளிகளுக்கு நிபந்தனை ஜாமீன்

செய்திப்பிரிவு

ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகளை பதுக்கி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சட்டவிரோதப் பணப்பரிமாற் றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், தி்ண்டுக் கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி, குற்றம் சாட்டப்பட்ட ரத்தினம் மற்றும் ராமச்சந்திரனுக்கு மட்டும் தினமும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சேகர்ரெட்டி உள்ளிட்ட மற்ற 3 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT