ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நூறு சதவீதம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
வேட்பாளர் அறிவிப்பு மற்றவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தாதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, அப்படி யாருக்கும் அதிருப்தி ஏற்படவில்லை என்று கூறினார்.