தூத்துக்குடி அனல்மின் நிலையத் தில், மூன்று மாதங்களுக்குப் பிறகு முழுமையாக மின் உற்பத்தி நேற்று தொடங்கியது.
வறட்சி காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந் ததால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 20 எம்ஜிடி திட்டத் தின் மூலம் வழங்கும் தண்ணீரை கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் நிறுத்தியது.
இதனால், அருகிலுள்ள என்டிபிஎல் அனல்மின் நிலையத்திலிருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்தும், டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீரை பெற்று 2 அலகுகள் மட்டும் கடந்த 3 மாதங்களாக இயக்கப்பட்டு வந்தன. இவையும் பழுது காரணமாக அவ்வப்போது நிறுத்தப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலைமை பொறியாளராக இருந்த டி.தங்கராஜ் மாற்றப்பட்டு, புதிய தலைமை பொறியாளராக கே.நடராஜன் கடந்த 2 வாரங்களுக்கு முன் நியமிக் கப்பட்டார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள கல் குவாரிகளிலிருந்து, டேங்கர் லாரிகள் மூலம் மி்ன் உற்பத்திக்கு தேவையான தண்ணீரை வாங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து படிப்படியாக ஒவ்வொரு அலகாக செயல்படத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை நான்கு அலகுகள் செயல்பட்டன.
5 அலகுகளும் இயக்கம்
2-வது அலகு மட்டும் ஆண்டு பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது. பணிகள் முடி வடைந்ததைத் தொடர்ந்து, நேற்று மாலை 4.51 மணியளவில் இந்த அலகிலும் மின் உற்பத்தி தொடங்கப் பட்டது. இதன்மூலம் 3 மாதங் களுக்கு பிறகு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக தலைமை பொறி யாளர் கே. நடராஜன் கூறும்போது, ‘‘தூத்துக்குடி மற்றும் திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை டேங்கர் லாரிகள் மூலம் வாங்கி வந்து அனல்மின் நிலை யத்தை இயக்கி வருகிறோம். அனல் மின் நிலையத்தில் எல்லா தண்ணீ ரையும் பயன்படுத்த முடியாது. தண்ணீரின் தரம் பரிசோதிக்கப்பட்டு, இதன் அடிப்படையில் பயன்படுத் தப்படுகிறது. 5 நாட்களுக்கு தேவைப்படும் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தினமும் கொண்டு வரப்படும் தண்ணீர் மூலம் அனல்மின் நிலைய அலகுகளை இயக்கி வருகிறோம்’’ என்றார் அவர்.