யாழ்ப்பாணம் சிறையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கடந்த ஜன.4-ம் தேதி முதல் வெவ்வேறு இடங்களில் 31 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி னார்.
இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 31 பேர், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.