தமிழகம்

தமிழகம் முழுவதும் 28, 29 தேதிகளில் அதிமுக தீர்மான விளக்க பொதுக்கூட்டம்

செய்திப்பிரிவு

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி வரும் 28, 29 ஆகிய தேதி களில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ் வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுக்குழு கடந்த 19-ம் தேதி நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை நாட்டு மக்களுக்கு விளக்கிடும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன. சட்டமன்ற உறுப்பி னர்கள், அந்தந்தப் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வேண்டும்.

மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தங்களுடைய மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை எம்.ஜி.ஆர்.மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து நிர்வாகி களுடனும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT