தென் வங்கக் கடலின் மத்திய பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
சனிக்கிழமை (இன்று) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய பிறகு, தமிழகத்தின் எந்த பகுதிக்கு மழை கிடைக்கும் என்பது தெரியவரும். இதனால், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புண்டு. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும். இது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்போது நவம்பர் 2, 3 தேதிகளில் உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களிலும் மழை தொடரும்.
சென்னையில் வெள்ளிக் கிழமை முதலே மழை பெய்ய தொடங்கும். அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு சென்னையில் மழை தொடர்ந்து பெய்யும்.