தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை களின் வழிக்காட்டி, அறிவிப்பு பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டிய பாமகவினர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இன்னும் அகற்றப்படாமல் இருக் கும் மதுக்கடைகளின் வழிகாட்டி, அறிவிப்பு பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தப் போவதாக பாமக அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த போராட்டத் தில் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட சுமார் 300 பேர் பங்கேற்றனர். அவர் கள், சென்னை அசோக் நகரில் உள்ள மதுக்கடை அறிவிப்பு பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டினர். இதை யடுத்து அன்புமணி உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து மேற்கு மாம்பலம் ராம கிருஷ்ணா திருமண மண்டபத்தில் வைத்தனர்.
காஞ்சிபுரம், விழுப்புரம், திரு வண்ணாமலை உட்பட தமிழகம் முழுவதும் மதுக்கடை பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டிய பாமகவினர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சமூகநலக் கூடங்கள், திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டனர். பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட அன்புமணி உள்ளிட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.