திமுக செயல் தலைவராக பொறுப் பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 4-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொலைபேசியில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் பிரபு, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.