தமிழகம்

அரசு பள்ளியில் கட்டணம் வசூல்: மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை

செய்திப்பிரிவு

கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் கல்விக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.

கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக 11-ம் வகுப்பில் சேரும் மாணவிகளிடம் கட்டணம் வசூலிக் கப்படுவதாகவும், இதற்காக தனியாக ஜெராக்ஸ் கடையில் வசூல் நடப்பதாகவும், அங்கு பணம் செலுத்தி ரசீது பெற்றால் மட்டுமே சேர்க்கை நடைபெறுவ தாகவும் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து நேற்று காலை காஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜரத்தினம் கூடுவாஞ்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று புதியதாக சேர்ந்த மாணவர்கள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் , பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோரிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, “புதியதாக சேரும் மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் அறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT