தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடையில் அதிக வெப்பத்தால் மின் உப கரணங்களில் சிறுபழுதுகள் ஏற்பட்டு, மின் விநி யோகம் தடைபட வாய்ப்பு உண்டு. மின் உபகரணங்கள் பழுது, மின்விநியோகம் தடைபடுவது, மின்சார இடையூறு போன்ற தகவல்களை மின்தடை தகவல் மையம் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக்கான செயற் பொறியாளரிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
செயற்பொறியாளர்கள் மற்றும் மின்தடை தகவல் மைய தொலைபேசி எண்கள் மின்வாரிய இணையதளத்தில் (>www.tangedco.gov.in) வெளியிடப் பட்டுள்ளன. கீழ்க்கண்ட எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மின்தடை தகவல் மையம் (1912), மின்துறை அமைச்சர் முகாம் (044 - 24959525), சென்னை தலைமையிட மின்தடை தகவல் மையம் (044 -28524422, 28521109). இயக்குதல், பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர்களின் செல்போன் எண்கள் (பகுதிவாரியாக): வியாசர்பாடி (9445850871), தண்டையார்பேட்டை (9445850889), பொன்னேரி (9445850915), பெரம்பூர் (9445850959), அண்ணா சாலை (9445850686), மயிலாப்பூர் (9445850717), தி.நகர் (9445850727), அடையாறு (9445850555), கிண்டி (9445850179), கே.கே.நகர் (9445850202), போரூர் (9445850258), தாம்பரம் (9445850227), அம்பத்தூர் (9445850311), அண்ணா நகர் (9445850286), ஆவடி (9445850344). இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.