தமிழகம்

பொதுவுடமைவாதிகள் சிலரின் சுயநலத்தால் கம்யூனிச கொள்கைகள்: சட்டப்பேரவையில் எதிரொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது - கருணாநிதி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பொதுவுடமைவாதிகள் சிலரின் சுயநலத்தால் தமிழக சட்டப் பேரவையில் கம்யூனிச கொள்கை கள் எதிரொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சேலம் மக்கள் குழு என்ற அமைப்பை நடத்தி வருபவர் பியூஸ் மானுஷ். சேலத்தில் மேம் பாலப் பணிகளை எதிர்த்து போராடியதால் கைது செய்யப் பட்டு சிறையில் தாக்கப்பட்டுள்ளார். இருட்டு அறையில் அடைத்து சுமார் 30 பேர் அவரை தாக்கி யுள்ளனர். இது குறித்து மனித உரிமை ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. அரசுத் தரப்பில் சிறைத்துறையினரிடம் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. அதில் உண்மை என்ன என்பது விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள் ளது. நூலகத்தை பராமரித்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் நீதிமன்றமே குழு அமைத்து அந்தப் பணியை மேற்கொள்ளும் என வாய்மொழி மூலமாக எச்சரித்துள்ளனர்.

பொதுவுடமைவாதிகள் ஒருசில ரின் சுயநலத்தால் தமிழக சட்டப் பேரவையில் கம்யூனிச கொள்கை கள் எதிரொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாம்தான் கவலைப்படுகிறோமே தவிர, அக்கட்சித் தலைவர்கள் வருத்தப்படுவதாகத் தெரிய வில்லை.

பாரத ஸ்டேட் வங்கி, கல்விக் கடனில் 40 சதவீதத்தை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. அவர்கள் கந்து வட்டிக்காரர்களைப் போல மாணவர்களை நெருக்கிறார்கள். இதனால் மாணவர்களில் சிலர் தற்கொலையை நாடுகிறார்கள். கல்விக் கடனை அடைப்பதாக வாக்குறுதி அளித்த அதிமுக அரசு, உடனடியாக தமிழக மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடனை அடைக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT