இலங்கை கடற்படையினர் தாக்கியதில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 4 பேர் காயமடைந்தனர். 10 மீன்பிடி வலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு, வலைகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த 4 மீனவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவர்களை அதிகாரிகள் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமீப காலமாகவே, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் மிகுதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.