எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் பயறு வகை பயிர்களின் உற்பத்தி, லாபத் தைப் பெருக்குவது தொடர்பான 3 நாள் தேசியக் கருத்தரங்கு சென்னையில் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை யின் (எம்எஸ்எஸ்ஆர்எப்) செயல் இயக்குநர் வி.செல்வம், ஆலோசகர் எஸ்.ஏ.பாட்டீல் ஆகி யோர் சென்னையில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
நம் நாட்டுக்கு ஆண்டுக்கு 18 மில்லியன் டன் பருப்பு வகைகள் தேவைப்படுகின்றன. ஆனால், 13 முதல் 14 மில்லியன் டன்தான் உற்பத்தி செய்கிறோம். இதனால் ஏற்படும் பற்றாக்குறையைப் போக்க ஆஸ்திரேலியா, கனடா, மியான் மர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் ஜனவரி மாதம் நெல் அறுவடைக்குப் பிறகு அந்த நிலத்தில் பாசிப்பயிறு, உளுந்து போன்றவற்றை பயிடுவர். இது போல நாடு முழுவதும் நெல் அறுவடைக்குப் பிறகு பயிறு வகைகளைப் பயிரிட்டாலே ஒரு மில்லியன் டன் பருப்புகளை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். ஊடுபயிராக பயிரிடுவதன் மூலமாகவும் உற்பத்தியை அதி கரிக்கலாம்.
இந்தியாவில் 1980-ம் ஆண்டு 22 மில்லியன் ஹெக்டேரில் 10 மில்லியன் டன் பயிறு வகைகள் விளைவிக்கப்பட்டன. 2013-ம் ஆண்டு 23 மில்லியன் ஹெக்டேரில் 18 மில்லியன் டன் பயிறு வகைகள் விளைவிக்கப்பட்டன. அரசு முயற்சியால் பயிறு வகைகள் உற் பத்தி பெருகியுள்ளது. ஆனாலும், பற்றாக்குறை நீடிக்கிறது.
இந்த சூழலில், ‘பயறு வகை பயிர்களின் உற்பத்தி, லாபத்தை அதிகரிப்பதன் மூலம் உணவு மற்றும் உத்தரவாதத்தை உருவாக் குதல்’ என்ற தலைப்பிலான 3 நாள் தேசியக் கருத்தரங்கு சென்னையில் நடக்க உள்ளது. தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவ னத்தில் இக்கருத்தரங்கு வரும் 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர் கள் கூறினர்.