தமிழகம்

சுவாதி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் 3 நாள் விசாரணை நடத்த போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராம்குமாரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.டி. பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய் யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கி டையே, ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நீதிமன்ற அனுமதியின் பேரில் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் கடை நடத்தும் சிவக்குமார் ஆகியோர் குற்றவாளியை அடை யாளம் காட்டினர்.

சுவாதி கொலை குறித்து பல்வேறு தகவல்களை பெறுவதற் காக ராம்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி நுங்கம்பாக்கம் போலீஸார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மூர்மார்க்கெட் அல்லிகுளம் வளாகத்தில் செயல்படும் 14-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசார ணைக்காக புழல் சிறையில் இருந்து ராம்குமாரை நேற்று மதியம் 3.05 மணியளவில் போலீஸார் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அவரை லிப்ட் மூலம் மூன்றாவது தளத்துக்கு அழைத்துச் சென்று குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.கோபிநாதன் முன்பு மதியம் 3.09 மணிக்கு ஆஜர்படுத் தினர்.

அப்போது, ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்ராஜ், போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபணை தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘இந்த வழக்கில் தேவையான ஆவணங்களையும், ஆதாரங் களையும் போலீஸார் திரட்டி விட்டனர். எனவே, தற்போது உடல்ரீதியாகவும், மனரீதியா கவும் பலவீனமாக உள்ள ராம் குமாரை போலீஸ் காவலில் அனுப்பினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, போலீஸ் காவலுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரி வித்த அரசு தரப்பு வழக்கறிஞர் இரா.குளஞ்சிநாதன், “சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா, எந்த நோக்கத்துக்காக கொலை நடந்தது என்று அறிந்துகொள்ள 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.கோபிநாதன், ‘‘ராம்குமாரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. போலீஸ் காவலில் ராம்குமார் இருக்கும்போது அவரது வழக்க றிஞர் காலை, மாலை நேரங்களில் அரை மணி நேரம் சந்திக்கலாம்’’ என்று உத்தவிட்டார்.

இதையடுத்து, ராம்குமாரை நீதிமன்றத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் நேற்று மாலையில் இருந்தே போலீஸார் விசார ணையை தொடங்கியுள்ளனர். சுவாதி கொலை குறித்து அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதாக கூறப் படுகிறது.

SCROLL FOR NEXT