தமிழகம்

கட்சியையும் ஆட்சியையும் மீட்டெடுக்கும் போராட்டத்தில் நிச்சயம் வெல்வேன்: ஓபிஎஸ்

செய்திப்பிரிவு

சசிகலா குடும்பத்திடம் இருந்து கட்சியையும், ஆட்சியையும் மீட் கும் வரை எங்களின் தர்ம யுத்தம் தொடரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குப்பட்ட தண்டை யார்பேட்டையில் நேற்று பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகள், மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வ நாதன், பொன்னையன், க.பாண் டியராஜன் மற்றும் மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி ஓபிஎஸ் பேசியதாவது:

‘பிறந்தநாளின்போது யாரும் எனது வீட்டுக்கு வர வேண்டாம். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்’ என ஒவ்வொரு ஆண்டும் ஜெய லலிதா கூறுவார். அப்படிப்பட்டவர் இன்று நம்மிடம் இல்லை என்ற வருத்தம் அனைவரிடமும் உள் ளது. எந்த குடும்பத்தின் கைகளில் ஆட்சியும், கட்சியும் சென்றுவிடக் கூடாது என ஜெயலலிதா நினைத்தாரோ, அந்தக் குடும் பத்தின் கையில் ஆட்சியும், கட்சியும் சென்றுவிட்டது.

கடந்த 2011-ல் சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் அனை வரையும் கட்சியைவிட்டு நீக்கிய தோடு, போயஸ் தோட்ட இல்லத் தில் இருந்தும் ஜெயலலிதா வெளி யேற்றினார். பிறகு சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்ட ஜெய லலிதா, மற்றவர்களை கடைசி வரை சேர்க்கவில்லை. ஆனால், இப்போது அவரால் நீக்கப்பட்ட வர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சசிகலா குடும் பத்திடம் இருந்து கட்சியையும், ஆட்சியையும் மீட்கும்வரை எங்களது தர்ம யுத்தம் தொடரும்.

ஜெயலலிதா மரணத்தில் பல் வேறு மர்மங்கள் இருப்பதாக தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் சந்தேகப்படு கின்றனர். நான் முதல்வராக இருந்தபோது விசாரணை ஆணை யம் அமைக்க நடவடிக்கை எடுத் தேன். ஆனால், அதன்பிறகு நிலைமை மாறிவிட்டது. ஜெய லலிதா மீது உண்மையான பற்று இருந்தால் அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டுவர விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நாங்கள்தான்...

பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். போயஸ் தோட்ட இல்லத்துக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உரிமை கோரியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. உள்ளத்தில் உள்ளதை அவர் பேசியிருக்கிறார்.

அதிமுக கட்சி விதிகளின்படி தற்காலிக பொதுச்செயலாளரால் யாரையும் கட்சியைவிட்டு நீக் கவோ, சேர்க்கவோ முடியாது. எனவே, சசிகலா எங்களை கட்சியை விட்டு நீக்கியதும், தினகரன் உள்ளிட்டவர்களைச் சேர்த்ததும் செல்லாது. கட்சியின் அடிப்படை உறுப்பினராககூட இல்லாத டிடிவி தினகரன், துணைப் பொதுச்செயலாளராக முடியாது. அடிப்படை உறுப்பினராக இல்லாத அவர் எங்களுக்கு வேண்டுகோள் விடுப்பது ஆச்சரியமாக இருக் கிறது.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும், ஏழரை கோடி தமிழக மக்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள்தான் உண்மையான அதிமுக. நீதியும், நியாயமும் எங்கள் பக்கம் இருப் பதால் தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும். அதிமுக தலைமை அலுவலகம் தானாகவே எங் களிடம் வந்து சேரும்.

எம்எல்ஏக்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை. அவரும் சிக்கலில் மாட்டிக் கொண் டிருக்கிறார் என நினைக்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையே அறிவித்துள்ளார். பொறுமையாக நாங்கள் எங்களது பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பொறுத்தார் பூமி ஆள்வார்.

இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

SCROLL FOR NEXT