தமிழகம்

இலங்கையின் கைது, வன்முறையை தடுத்து நிறுத்தி 85 மீனவர்கள், 128 படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

செய்திப்பிரிவு

மீனவர்கள் மீதான கைது மற்றும் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது இலங்கையில் உள்ள 85 தமிழக மீனவர்கள், 128 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், 3 வெவ்வேறு சம்பவங்களில் 5 மீன்பிடி படகு களில் சென்ற 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையில் இருந்து ஒரு படகில் சென்ற 8 மீனவர்கள் 4-ம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டு திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து 2 படகுகளில் சென்ற 15 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 2 படகுகளில் சென்ற 9 மீனவர்கள் 5-ம் தேதி காலை கைது செய்யப்பட்டு, தலைமன்னார் மற்றும் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் தாக்குதல், கைது செய்வது தொடர் வதால், ஏழை மீனவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பாக் நீரிணை பகுதியில் தமிழக மீனவர்களுக்கான உரிமையை மீட்டெடுப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 76-ல் இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தங்கள், அரசியலமைப்புக்கு எதிரானவை என உச்ச நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது. அதன் மூலம் கச்சத்தீவு உறுதியாக மீட்கப்படும்.

விசைப் படகுகளை, ஆழ் கடல் மீன்பிடி படகுகளாக மாற்று வதற்கான ஒருங்கிணைந்த திட்டத் துக்கு மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து கோரி வருகிறோம். இதன் மூலம், நீண்டகால வாழ் வாதார பிரச்சினைக்கு முடிவு காணலாம். மத்திய அரசின் அறிவுரைப்படி, ஆழ்கடல் மீன்பிடி படகுகளை செலுத்துவதற்கான பயிற்சி மீனவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது. எனவே, ஆயிரத்து 650 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது, தமிழக மீனவர்கள் மீது இலங்கையின் வன்முறைகளையும், கைதையும் தடுத்து நிறுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடி உரிமையை காக்க வேண்டும்.

தற்போது இலங்கையில் தமிழக மீனவர்களின் 128 மீன்பிடி படகுகள் உள்ளன. அவை பல காலமாக பயன்பாடின்றி நிறுத்தி வைத்திருப்பதால், மிக மோசமாக பழுதடைந்து வருகின்றன. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தூதரக ரீதியிலான நடவடிக்கை மூலம் 85 மீனவர்கள் மற்றும் 128 படகுகளை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் தமிழக மீனவர்களின் 128 மீன்பிடி படகுகள் உள்ளன. அவை பல காலமாக பயன்பாடின்றி நிறுத்தி வைத்திருப்பதால், மிக மோசமாக பழுதடைந்து வருகின்றன.

SCROLL FOR NEXT