சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 'அட்சயம் புட் பாக்ஸ்' என்ற தானியங்கி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா நேற்று திறந்துவைத்தார்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல், பயணிகள் தங்க ளுக்கு வேண்டிய உணவு வகை களை இந்த புட் பாக்ஸில் பெறலாம். இதில் ஏ டூ பி, மதுரை அப்பு, ஆசிப் பிரியாணி உள்ளிட்ட 5 உணவ கங்களின் உணவுகள் கிடைக்கும்.
வாடிக்கையாளர், தங்களுக்கு தேவையான உணவை தொடு திரையில் உள்ள பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். பின்பு, அதற்கான கட்டணத்தை ஏடிஎம் கார்டு மூலம் கட்ட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு, 90 நொடிகளில் இயந்திரத்தின் மூலம் கொடுக்கப்படும்.
இதுகுறித்து 'அட்சயம் புட் பாக்ஸ்' நிறுவனர் சதீஷ் சாமிவேலு மணி கூறும்போது, ''உணவுகளை தயாரித்து, அதை தகுந்த முறை யில் கட்டி இங்குள்ள இயந்திரத் தில் வைப்பார்கள். வாடிக்கை யாளர், தொடுதிரையில் உணவை தேர்ந்தெடுத்த பிறகு, உடனே இயந் திரத்துக்கு தகவல் அனுப்பப்படும். பிறகு, அந்த உணவை இயந்திரம் எடுத்துக் கொடுக்கும். சென்னை யில் இதுவரை 3 இடங்களில் 'புட் பாக்ஸ்' உள்ளது. ரயில் நிலையத்தில் அமைத்திருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்'' என்றார்.
சபரிமலைக்கு கூடுதல் ரயில்கள்
''கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சபரிமலைக்கு கூடுதலான ரயில்கள் இயக்கப்படும். கம்பியில்லா இணைய வசதியான வை-பை சோதனை முறையில் ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படு கிறது. இதில் உள்ள கோளாறுகளை சீரமைத்து வருகிறோம்'' என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.