தமிழகம்

எண்ணெய் கசிவால் பாதிப்பு: சென்னை கடல் பகுதியில் மீன்களை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் - ஐஐடி ஆய்வறிக்கையில் பரிந்துரை

செய்திப்பிரிவு

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி இரு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் எண்ணெய் படலம் உருவானது. பல்வேறு தரப்பினரும் இணைந்து எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை ஐஐடி சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதார பொறியியல் துறை பேராசிரியர் எஸ்.மோகன், சம்பவம் நடந்த 3-வது நாளில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். 6 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், எண்ணெய் கசிவினால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை சரிபடுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு:

எண்ணெய் கசிவு சம்பவம், சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழ்ந் துள்ள பேரிடர் ஆகும். கடலில் கலந்துள்ள எண்ணெய் படலம் காரணமாக எதிர்காலத்தில் பல் வேறு பின்விளைவுகள் ஏற்படலாம். கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. எண்ணெய் படலம் கடல் பகுதியில் நீண்ட காலம் தங்கியிருக்கும். பாலி அரோ மாடிக் ஹைட்ரோகார்பன் என்ற விஷத்தன்மை கொண்ட எண் ணெய், கடல் பகுதி மற்றும் கடற் கரைப் பகுதியில் கலந்திருக்கிறது. எனவே, கடல் பகுதி, கடற்கரை, கடலில் வாழும் மீன்கள், கடலின் அடிப்பகுதியில் வாழும் கடலோர உயிரினங்கள் மற்றும் தாவரங்களை நீண்ட காலம் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

கடலோர பகுதியில் எண்ணெய் படலத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களில் ஏதேனும் பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய கடலில் பிடிக்கப்படும் மீன் களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சென்னை கடற்கரை யைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களின் தசைப் பகுதியை தொடர்ந்து பரிசோதனை செய்துவர வேண்டும், இந்த பரிசோதனை நீண்ட காலத்துக்கு நடைபெற வேண்டும்.

கடலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கழிவுகள் ஒருவேளை ஆழ்துளைக் கிணறுகளில் கொட்டப் படலாம். எனவே, இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் இருக் கிறதா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT