தமிழகம்

விபத்தில் இறந்த 4 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் உதவி

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

விழுப்புரம் மாவட்டம், உளுந் தூர்ப்பேட்டை, எலவனாசூர் கோட்டை புறவழிச் சாலையில் கடந்த 5-ம் தேதி இரவு சென்னை யில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றும் நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த பழனியம்மாள், ஷர்மி, ஜெயந்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பரவக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் சம் பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இவ்விபத்தில் ஆறுபேர் காயமடைந்ததை அறிந்து வருத்தமுற்றேன். விபத்தில் உயி ரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப் படும்.

SCROLL FOR NEXT