தமிழகம்

ஓ.பி.சி. வருமான வரம்பு விவகாரம்: 120 பேருக்கு ஐ.ஏ.எஸ். பதவி கிடைக்க பிரதமர் தலையிட கோரிக்கை

செய்திப்பிரிவு

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பைக் காரணம் காட்டி, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 120 பேருக்கு பணி நியமனம் வழங்காமல் இருக்கும் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச் சங்க கூட்டமைப்பின் தலைவர் வி.அனுமந்தராவ் கூறியுள்ளார்

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

2015-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1078 மாணவர்களில் 926 பேருக்கு மட்டுமே மத்திய பணியாளர் நலத்துறை பதவி ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 120 பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிரிமிலேயர் எனும் முறையைப் பின்பற்றி, அவர்களின் பெற்றோரின் மாத சம்பளத்தைக் கணக்கிட்டு, பதவி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட சிலருக்கும் கீழ் பதவிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஏ.எஸ். பதவி ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக ஐ.ஆர்.எஸ். பதவியை ஒதுக்கியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களின் பெற்றோ ருக்கு ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு அதிகமாக உள்ள தால், பதவி ஒதுக்கீடு செய்ய வில்லை என்று பணியாளர் நலத் துறை அதிகாரிகள் வாய்மொழி யாகக் கூறியுள்ளனர்.

இப்பிரச்சினையில், பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, பாதிக் கப்பட்ட மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி ஒதுக்கீடு செய்யும்படி, பணியாளர் நல அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, பிற் படுத்தப் பட்டோர் பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் செயல் தலைவர் ஜெ.பார்த்தசாரதி, பொதுச் செயலாளர் கோ.கருணா நிதி, பொருளாளர் எம்.இளங்கோ வன், துணைப் பொதுச் செயலாளர் எம்.ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT