‘தி இந்து’ ஆட்டோ எக்ஸ்போ 2016 என்ற பெயரிலான பிரம்மாண்ட வாகனக் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடக்க உள்ளது.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ‘தி இந்து’ ஆட்டோ எக்ஸ்போ 2016 என்ற பிரம்மாண்ட வாகன கண்காட்சி வரும் 27, 28-ம் தேதி களில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. 2 நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடை பெறும்.
இதில் விதவிதமான கார்கள், புதுரக பைக்குகள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. பழைய மற்றும் புதிய வாகனங்களின் அணிவகுப்பும் கண்காட்சியில் இடம்பெறுகிறது. மேலும் சென்னை ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் பாரம்பரிய கார் அணிவகுப்பும் கண்காட்சியில் இடம்பெறுவது சிறப்பம்சம்.
உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு முன்னணி நிறுவனங் களைச் சேர்ந்த வாகனங்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்ய வாகனப் பிரியர் களுக்கு இந்த கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.