தமிழகம்

மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மின்னணு குடும்ப அட்டை கள் விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறிய தாவது:

கடந்த 5 ஆண்டுகளில் உண வுத் துறைக்காக ரூ.24,400 கோடி ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.14,550 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. திமுக ஆட்சியைவிட ரூ.9,850 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34,686 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. புதிய குடும்ப அட்டை கோரி மனு அளிப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் 60 நாட் களுக்குள் அட்டை வழங்கப் படுகிறது.

கடந்த 2011 ஜூன் முதல் 2016 ஜூன் 30 வரை 16 லட்சத்து 20 ஆயிரத்து 388 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டு எனும் மின்னணு குடும்ப அட்டை வழங்க கடந்த நிதியாண்டில் ரூ.318.40 கோடி ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முடிந்ததும், மின்னணு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.

முதல்வர் கோரிக்கை

கடந்த 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 52,806 கிலோ லிட்டராக இருந் தது. அதன்பின், 10 முறை மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்தது. தற் போது மாதந்தோறும் 25,704 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மாநிலத்தின் தேவையில் 44 சதவீதம் மட்டுமே. எனவே, மாதம் 59 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பணியிடங்கள் நிரப்பப்படும்

விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உலர்த்த, 50 கொள் முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் களங்கள் ரூ.5 கோடியில் அமைக்கப்படும். நெல்லின் ஈரப் பதத்தை கணக்கிட 145 ஈரப்பத மானிகள் கொள்முதல் செய்யப் படும். நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலைகளில் முறைப்பொறியாளர்கள், தரக் கட்டுப்பாட்டு பிரிவில் உதவி மேலாளர்கள் நேரடியாக நியமிக் கப்படுவர். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 100 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில், 10 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு இளஞ்சிவப்பு, பச்சை அட்டைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT