நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிவாயு எடுக்கும் திட் டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
இந்த திட்டத்தைச் செயல்படுத் தினால் நிலத்தடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படும். இதனால் சோலைவனமாக உள்ள இப்பகுதி பாலைவனமாக மாறும். காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்ததால், அதை திசை திருப்புவதற்காகவே தற்போது தமிழகத்தில் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.
காரைக்காலில் எரிவாயு எடுக் கக்கூடாதென அம்மாநில முதல மைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையிலும்கூட தமிழக முதல்வர் மவுனமாக இருக்கிறார்.
கூடங்குளம் திட்டத்தைப்போல காலம் கடத்தினாலோ, போராட்டம் நடத்துவோரை சிறைபிடித்து வைத்தாலோ இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
நெடுவாசலில் எரிபொருள் சோதனைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட இடத் தைப் பார்வையிட கட்சி நிர்வாகி களுடன் சீமான் நேற்று சென் றார். அப்போது, அங்கு போராட் டத்தில் ஈடுபட்டோர், “இங்கு எந்தக் கட்சியினருக்கும், கட்சிக் கொடிகளுக்கும் அனுமதி கிடை யாது” என்றுகூறி அவர்களைத் தடுத்தனர்.